மே மாதம் நடைபெறவிருந்த சிஏ தேர்வுகளை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சிஏ தேர்வு ஒத்திவைப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது
மே மாதம் நடைபெறவிருந்த சிஏ தேர்வுகளை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

புதுதில்லி: வரவிருக்கும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பட்டய கணக்காளர் தேர்வுகளை, மே முதல் ஜூன் வரை நடைபெறும் இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், தேர்வை ஒத்திவைக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி ஹரிசங்கர், 27 பட்டயக் மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும், தேர்வர்கள் தேர்வு எழுதுவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற ஒரே காரணத்திற்காக, சுமார் 4.26 லட்சம் பேர் தேர்வு எழுத வேண்டிய தேர்வை தடம் புரளச் செய்ய முடியாது என்றார். அதே வேளையில், இதுபோன்ற கோரிக்கை நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டது ஆச்சரியமாக இருப்பதாகவும், இந்த மனு ஆதாரமற்றது என்றார்.

மக்களவைக்கான தேர்தல்கள் மே 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும், மே 6 மற்றும் 12 தேதிகளில் தேர்வு எதுவும் நடைபெறவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவன சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூன் இரண்டாவது வாரத்தில் தேர்வை மறுதிட்டமிடுவது பயிற்சியை சீர்குலைக்கும் என்றும், வாக்குப்பதிவு நடைபெறும் தேதிகளில் தேர்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய தகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிலையில், தேர்வு அட்டவணை மக்களவைத் தேர்தலுடன் முரண்படும் என்றும், வாக்குகள் பதிவான பிறகு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இது ஜனநாயக உரிமைகள் மீறப்படும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com