எங்கே வேலை? இன்னமும் 30% ஐஐடி பட்டதாரிகளுக்கு வேலைகிடைக்கவில்லை!

நாட்டில் இன்னமும் 30% ஐஐடி பட்டதாரிகளுக்கு வேலைகிடைக்கவில்லை என்கிறது புள்ளிவிவரம்.
சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

மும்பை: நாட்டில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பணியானது கடந்த ஜனவரியில் தொடங்கியபோதும், இன்னமும் சராசரியாக 30 - 35 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டைக்காட்டிலும், பல்வேறு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்ததே, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வேலை கிடைக்காத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகியிருக்கிறது. சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் வளாகத் தேர்வுகளை நடத்தி வருகின்றன.

சென்னை ஐஐடி
டெல்டா, மேற்கு மாவட்டங்களில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்!

சில ஐஐடிக்கள், வேலைவாய்ப்புள்ள நிறுவனங்களைத் தேடி, வளாகத் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றன. சில ஐஐடிக்கள், வரும் ஜூன் அல்லது ஜூலையில் நடக்கும் வளாக நேர்காணல் வரை காத்திருக்கலாம் என்ற திட்டத்தில் உள்ளன.

இந்த வேலையின்மைக்குக் காரணமான, உலகளாவிய பாதிப்புதான் என்றும், உலகம் முழுவதுமே தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி வாய்பு குறைந்துள்ளது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

முதல்கட்ட வளாக நேர்காணல் முடிந்தும் கூட, மும்பை ஐஐடியில் பி.டெக், முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள் என 30 சதவீதம் பேர் இன்னமும் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு அமர்த்தப்படவில்லை. நேர்காணலுக்கு 2,400 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 1970 பேர் மட்டுமே தேர்வு, நேர்காணலைத் தாண்டி பணிவாய்ப்பு பெற்றுள்ளனர்.

சென்னை ஐஐடி
மற்றுமொரு புற்றுநோய் மருந்து மோசடி கும்பல்: போலி மருந்துகள் பறிமுதல்

இதர கல்வி நிறுவனங்களிலும் இதே நிலைதான் இருக்கிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் வேலை வாய்ப்பு இந்த ஆண்டு குறைந்துதான் உள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 66 சதவீத மாணவர்கள் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். 34 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னும் ஒரு சில மாதங்கள் உள்ளன. சில நிறுவனங்கள் நேர்காணலுக்கு வரவிருக்கின்றன. சில மாணவர்கள் வேறு சில வேலை வாய்ப்புகளைத் தேடவும் தொடங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் ஏஐ, தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளை சூறையாடிவிட்டிருடிக்கிறது. எனவேதான் தகவல்தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு குறைந்திருக்கிறது. ஐஐடியில் படித்த பல பட்டதாரிகள் தற்போது கல்வி மையங்களில் பேராசிரியர் பணிக்கு அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com