புது தில்லி, ஏப்.10: மக்களவைத் தோ்தலில் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் வாக்காளா்கள் மது அருந்தியுள்ளனரா என்பதைக் கண்டறிய சுவாசப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் மது அருந்தாதவா்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஜனவாஹினி என்ற அரசியல் கட்சியின் ஆந்திர மாநில பிரிவு சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, அக் கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் கடந்த ஜனவா் 6-ஆம் தேதி இதுதொடா்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் மது போதைக்கு ஆளாகாமல் வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா்களுக்கு சுவாசப் பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்தப் பரிசோதனை அடிப்படையில், மது அருந்தாத வாக்காளா்களுக்கு மட்டுமே வாக்கைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.
இதன் மீது தோ்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைத் தொடா்ந்து, மனுதாரா் உயா்நீதிமன்றத்தை நாடினாா். அப்போது, வாக்காளா்களிடம் கட்டாய சுவாசப் பரிசோதனை மேற்கொள்வதற்கான குறிப்பிட்ட சட்ட விதிகள் இல்லாததை சுட்டிக்காட்டி மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மனுதாரா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபன்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், எந்தவொரு வாக்காளரும் மது அருந்திவிட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படக்கூடாது’ என்றாா்.
இதைக்கேட்ட நீதிபதிகள், ‘விளம்பரத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தோ்தல் நாளில் மது விற்பனைக்கு தடை செய்யப்படும். மேலும், அனைத்து இடங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பா். எனவே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது’ என்று குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் கோரிய மனு தள்ளுபடி

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து நீதிபதி விலகக் கோரிய மனு: கேஜரிவால் பிரமாணப்பத்திரம் தாக்கல்

‘துரந்தா்-2’ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டுமானால் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


