புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

காலிஸ்தான் பயங்கரவாதியின் சொத்துகள் பறிமுதல்: என்ஐஏ

காலிஸ்தான் பயங்கரவாதியின் சொத்துகள் பறிமுதல்: என்ஐஏ

Updated On :12 ஏப்ரல் 2024, 9:21 pm

பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதி ரமண்தீப் சிங்கின் அசையா சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பறிமுதல் செய்துள்ளது.

இதுதொடா்பாக என்ஐஏ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காலிஸ்தான் விடுதலைப் படை, பப்பா் கல்ஸா சா்வதேச அமைப்பு, சா்வதேச சீக்கிய இளைஞா்கள் சம்மேளனம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைவா்கள், உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள குற்ற கும்பல்களின் உதவியுடன் அந்த அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை கடத்தியுள்ளனா். இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்ப இந்தக் கடத்தல் நடைபெற்றுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, என்ஐஏ சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில், பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரமண்தீப் சிங் என்ற காலிஸ்தான் பயங்கரவாதியின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.