காங்கிரஸ் இன்னும் சில ஆண்டுகளில் டைனோசரைப் போல் அழிந்துவிடும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலம் கௌச்சரில் நடந்த பேரணியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். பௌரி மக்களவைத் தொகுதிக்கான கட்சியின் வேட்பாளரான அனில் பலுனிக்காக பாஜக மூத்த தலைவர் பிரசாரம் செய்தார்.
இந்த பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சியிலிருந்து பலர் வெளியேறுவது தொடர்கிறது. ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைகிறார்கள்.
இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ் டைனோசர் போல அழிந்துவிடுமோ என்று பயமாக உள்ளது. 2024-க்குப் பிறகு சில ஆண்டுகளில் காங்கிரஸின் பெயரைக் கேட்டால் சின்ன குழந்தைகளும் யார் என்று கேட்பார்கள்?
கட்சியில் தினமும் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொள்வதாகவும், எதிர்க்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் குறித்து அவர் ரியாலிட்டி ஷோவுடன் ஒப்பிட்டும் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது. அவரது குரல் சர்வதேச அளவில் கேட்கப்படுகிறது. மோடி நடத்திய பேச்சுவார்த்தையில் ரஷியா-உக்ரைன் போர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை உலகமே அங்கீகரித்து வருகிறது. முன்பு ரூ.600 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்தோம். ஆனால் ஏழு ஆண்டுகளில் மட்டும் ரூ.21,000 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். "இந்தியா இப்போது ஒரு சாதாரண நாடு அல்ல" என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம்: ராஜ்நாத் சிங்

மேற்கு வங்கத்தை பாகிஸ்தான் குறிவைத்தால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஈரான் போர்: முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


