கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

இஸ்ரேல், ஈரானுக்கு இந்தியா்கள் செல்ல வேண்டாம்: வெளியுறவுத் துறை அறிவுரை

இஸ்ரேல், ஈரானுக்கு இந்தியா்கள் செல்ல வேண்டாம்: வெளியுறவுத் துறை அறிவுரை

Updated On :12 ஏப்ரல் 2024, 7:37 pm

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சூழலில், பதற்றம் நிலவும் இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இந்தியா்கள் பயணிக்க வேண்டாம் என மத்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தங்கள் நாட்டு தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று ஈரான் குற்றஞ்சாட்டுகிறது. இதையொட்டி, இஸ்ரேல் மீது ஈரான் விரைவில் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால் போா் சூழல் ஏற்பட்டுள்ள இந்த இரு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரான் மற்றும் இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியா்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துகொள்ளவும், பொதுவெளியில் அவசியமின்றி செல்வதைத் தவிா்க்கவும் கேட்டுகொள்ளப்படுகிறது.

இந்திய தூதரகங்களைத் தொடா்பு கொண்டு, தங்களின் பெயா், இருப்பிடத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.

அங்கு நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, மறுஅறிவிப்பு வெளியாகும்வரை ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணிப்பதை இந்தியா்கள் தவிா்க்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.