அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து: பிரதமர் மோடி உறுதி

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 12:41 pm

DIN

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விரைவில் கிடைக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்.

நீங்கள், உங்கள் கனவுகளை உங்கள் எம்.எல்.ஏ மற்றும் உங்கள் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். கடந்த 60 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரசனைகளில் இருந்து விடுவிப்பேன். கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் முற்றிலும் மாறியதால் எனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்.

ஜம்மு-காஷ்மீரில் வரும் மக்களவைத் தேர்தல் எவ்வித அசம்பாவித சம்பவங்களின்றி நடத்தப்படும். நாடு எதிர்கொள்ளும் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளக் கூடிய வலுவான அரசை மத்தியில் வழங்குவதற்காகவே எதிர்வரும் தேர்தல் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.