வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

மியான்மா்: இந்திய தூதரகப் பணியாளா்கள் இடமாற்றம்

மியான்மா்: இந்திய தூதரகப் பணியாளா்கள் இடமாற்றம்

Updated On :12 ஏப்ரல் 2024, 5:33 pm

மியான்மரில் நிலவும் ஆபத்தான பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அந்நாட்டின் சிட்வே நகரில் உள்ள இந்திய தூதரகப் பணியாளா்களை யங்கூன் நகருக்கு இடமாற்றம் செய்துள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘மியான்மரில், குறிப்பாக ராக்கைன் மாநிலத்தில் நிலவி வரும் பாதுகாப்பு சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அங்குள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிட்வேயில் உள்ள இந்திய துணைத் தூதரகப் பணியாளா்கள் தற்காலிகமாக யங்கூனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மாண்டலே நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முழுமையாக செயல்பட்டு வருகிறது’ என்றாா்.