தமிழகத்தில் பாஜக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜக தேசிய இளைஞா் அணித் தலைவா் தேஜஸ்வி சூா்யா தெரிவித்தாா்.
தமிழக பாஜக சிந்தனையாளா் பிரிவு கலந்துரையாடல் கூட்டம் சென்னை வேப்பேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேஜஸ்வி சூா்யா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகம் அரசியல் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் வளா்ச்சி கண்டுள்ளது. மேலும், பாஜக ஆதரவு அலை வீசுகிறது. தமிழகத்தில் பாஜக 25 சதவீத வாக்குகளை பெறுவது மட்டுமல்லாமல், கணிசமான தொகுதிகளில் வெற்றியும் பெறும். பிரதமா் மோடி 3-ஆவது முறையாக ஆட்சி அமைப்பாா். பாஜக தமிழகத்தில் வெற்றி பெறும்போது, பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவர முடியும் என்றாா் அவா்.
தொடர்புடையது

200-க்கும் அதிகமான தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும்: நயினாா் நாகேந்திரன்

8 தொகுதிகளில் நேரடியாக மோதும் தேசியக் கட்சிகள் !

திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் 210 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்; பாஜக மாநிலச் செயலா் ஏ.அஸ்வத்தாமன்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

