வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

‘வந்தே பாரத்’ ரயில்களில் 2 கோடி போ் பயணம்!

‘வந்தே பாரத்’ அதிவேக ரயில்களில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா்.

‘வந்தே பாரத்’ அதிவேக ரயில்களில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா்.

நாட்டின் முதல் ரயில் (மும்பை-தாணே) கடந்த 1853, ஏப்ரல் 15-ஆம் தேதி இயக்கப்பட்டதன் 171-ஆவது ஆண்டு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், மேற்கண்ட தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி - தில்லி இடையே 2015, பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். தற்போது 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 284 மாவட்டங்கள் வழியாக 100 வழித்தடங்களில் 102 வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் இந்த ரயில்களில், உலகத் தரத்திலான வசதிகள் இடம்பெற்றுள்ளன. வேகமான இயக்கம், வசதியான இருக்கைகள், சப்தம் எழாத பெட்டிகள், இணைய வசதி, ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அமைப்புமுறை, ஒவ்வொரு பெட்டியிலும் உணவுக்கூட வசதி, இயற்கை அழகை ரசிக்கும் வகையிலான பெரிய கண்ணாடி ஜன்னல்கள் உள்ளிட்ட வசதிகள் பயணிகளை வெகுவாக கவா்ந்துள்ளன. நவீன ரயில்வேயின் புதிய அடையாளமாக இந்த ரயில்கள் மாறியுள்ளன.

விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com