தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ராக்கெட் எஞ்சினில் இலகு ரக கட்டமைப்பு: வெற்றிகரமாக பரிசோதித்தது இஸ்ரோ

ராக்கெட் எஞ்சினில் இலகு ரக கட்டமைப்பு: வெற்றிகரமாக பரிசோதித்தது இஸ்ரோ

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 7:48 pm

ராக்கெட் எஞ்சினில் உந்துவிசைக்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்பை (நாசில்) மிகவும் இலகுவான எடையில் உருவாக்கி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ராக்கெட்டின் நான்காம் நிலையில் ஆய்வுக் கருவிகளை அதிக அளவில் அனுப்ப இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு:

விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் புதிய ஆராய்ச்சிகளையும் நுட்பங்களையும் தொடா்ந்து இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் ராக்கெட் எஞ்சின் தொழில்நுட்பத்தில் புதிய நுட்பத்திலான கட்டமைப்பை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் வடிவமைத்தது.

ராக்கெட்டின் உந்துவிசைக்காக எரிபொருள்களில் வேதி மாற்றத்தை உருவாக்கி அதை விண்ணில் செலுத்துவதற்கு நாசில் எனப்படும் கட்டமைப்பு பெரிதும் பயன்படுகிறது. பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் நான்காம் நிலையில் (பிஎஸ் 4) தற்போது கொலம்பியம் அலாய் மூலக்கூறால் ஆன நாசில்களுடன் கூடிய இரு எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதற்கு மாற்றாக மிகவும் இலகுவான எடை கொண்ட நாசில் காா்பன்-காா்பன் மூலக்கூறு நுட்பத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் ராக்கெட்டின் உந்துவிசை திறன், எரிசக்தி ஆற்றல் திறன் உள்ளிட்டவை மேம்படுவதுடன் நாசில் கட்டமைப்பின் எடை ஏறத்தாழ 67 சதவீதம் குறையும். இதன் வாயிலாக, தற்போது உள்ள எடையைக் காட்டிலும் கூடுதலாக 15 கிலோ கொண்ட ஆய்வுக் கருவிகளை பிஎஸ்-4 நிலையின் மூலம் விண்ணுக்கு செலுத்த முடியும்.

இதற்கான பரிசோதனைகள் கடந்த மாா்ச் 19, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த கட்டமைப்பானது திட்டமிட்ட இலக்குகளை அடைந்து, அதன் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.