நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்பை முடித்தவா்கள் நேரடியாக ஆராய்ச்சிப் படிப்பில் (பிஎச்.டி.) சேர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதித்துள்ளது.
முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே பிஎச்.டி. படிப்பில் சேர முடியும் என்ற நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
8 பருவத் தோ்வுகளுடன் கூடிய நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், தேசிய தகுதித் தோ்வில் (நெட்) தகுதி பெற்று நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவா்கள், 4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புடன் சாராத துறைகளிலும் பிஎச்.டி. மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா்.
இதில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

பாரதியாா் பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐஐடி- நியூசிலாந்து கேன்டா்பரி பல்கலை. புரிந்துணா்வு

சவாலான தொகுதிகளை நேரடியாக எதிர்கொள்ளும் திமுக! அதிமுக?

என்சிஇடி நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


