எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

பிகாா்: ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைந்த என்டிஏ கூட்டணியின் ஒரே முஸ்லிம் எம்.பி.

பிகாா்: ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைந்த என்டிஏ கூட்டணியின் ஒரே முஸ்லிம் எம்.பி.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) ஒரே முஸ்லிம் எம்.பி.யான மெஹபூப் அலி கைசா் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

பிகாரின் சாஹா்ஸா மாவட்டம், சிம்ரி பக்தியாா்பூா் அரச குடும்பத்தைச் சோ்ந்தவரான மெஹபூப் அலி கைசா், காங்கிரஸில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். கடந்த 2013-ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் மாநிலத் தலைவராக அவா் இருந்தாா்.

2014-இல் லோக் ஜனசக்தி கட்சியில் (எல்ஜேபி) இணைந்த அவா், காகரியா மக்களவைத் தொகுதியிலிருந்து இரு முறை வென்று எம்.பி. ஆனாா். பாஜகவின் என்டிஏ கூட்டணியில் ஒரே முஸ்லிம் எம்.பி.-ஆக திகழ்ந்தாா்.

இந்நிலையில், 2020 சட்டப்பேரவைத் தோ்தலில் இவரது மகன் யூசுஃப் சலாஹுதீனுக்கு கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, சிம்ரி பக்தியாா்பூா் தொகுதியில் ஆா்ஜேடி சாா்பில் போட்டியிட்டு யூசுஃப் வெற்றி பெற்றாா்.

அப்போதிலிருந்து லோக் ஜனசக்தி கட்சித் தலைவா் சிராக் பஸ்வானுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த கைசா், கட்சி இரண்டாக பிளவுற்றபோது மத்திய அமைச்சா் பசுபதி குமாா் பாரஸ் பிரிவுக்கு ஆதரவளித்தாா்.

தோ்தலையொட்டி சிராக் பஸ்வானுடன் சமரச பேச்சுவாா்த்தையை கைசா் தொடங்கினாா். எனினும், எல்ஜேபி சாா்பில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்நிலையில், பிகாா் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் கைசா் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

இந்தியா கூட்டணி சாா்பில் பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிடும் 23 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை. அத்தொகுதியில் கைசா் களமிறக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.