
தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்சர்சனின் இலச்சினை காலங்காலமாக இருந்து வந்த சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாற்றப்பட்டது குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் டிடி செய்திகள் நேற்று(ஏப். 21) அறிவித்தது.
இந்திய அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்சனின் இலச்சினையின் நிறம் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது.
இதைத் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சனைக் காவிமயமாக்கும் முயற்சி என்பதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலருமான ஜவாஹர் சர்க்கார் குற்றம் சாட்டியிருந்தார்.
அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை என்று முதல்வர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கெளரவ் திவேதி பேசுகையில், "தூர்சர்சனின் இலச்சினையின் நிறத்தை பாஜகவுடன் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது, தூர்சர்சனின் இலச்சியின் வண்ணம் காவியல்ல, ஆரஞ்ச் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது." என்று விளக்கமளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.