பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!
பூங்காவில் காதலர்களை விசாரித்த எம்எல்ஏவின் செயல் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது


பூங்காவில் அமர்ந்திருந்த காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏவின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த காணொலியில், சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உல்ள வைஷாலி நகர் எம்எல்ஏ ரிகேஷ் சென் பூங்காவில் அமர்ந்திருந்த காதலர்களை அணுகி அவர்களை விசாரிக்கிறார்.
அவரிடம் பேசும் இளைஞர் ஒருவர், “ நாங்கள் நேரம் செலவழிக்கவும் பேசவும் இங்கு வந்தோம். நீங்கள் ஓயோ விடுதிகளை அடைத்து விட்டீர்கள். அதனால் பூங்கா மட்டுமே எங்களுக்கு உள்ளது” என தெரிவிக்கிறார்.
இன்னொருவர், “எல்லாவற்றையும் மூடிவிட்டீர்கள், குறைந்தபட்சம் ஓயோவையாவது திறக்கலாம். தனியாக சந்திக்க இடம் இல்லை” என தெரிவித்துள்ளார்.
ரிகேஷ் சென் அந்த காணொலியில், “இந்த விடியோ வழியாக நான் உணர்த்த விரும்புவது, பொது இடங்களான பூங்காக்கள் குழந்தைகள் விளையாடவும் பெரியவர்கள் நடமாடவும் தானே தவிர ஒழுங்கமற்ற நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபட கிடையாது” என தெரிவித்துள்ளார்.
விரைவில் இது போன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க ‘லைலா மஜ்னு’ பிரிவு உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
டிசம்பர் 2023-ல் அனுமதிக்கபடாத விடுதிகள் மீது ரிகேஷ் சென் நடவடிக்கை எடுத்ததையடுத்து இந்த நிகழ்வு தற்போது நடந்துள்ளது.
இந்த விடியோவுக்கு சமூக வலைத்தள பயனர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...