தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க நேரம் கேட்டு மோடிக்கு கார்கே கடிதம்
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)

புது தில்லி: நியாய பத்திரம் என்ற பெயரில் வெளியான தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடிதம் எழுதியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு கார்கே எழுதியிருக்கும் இரண்டுபக்க கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் நியா பத்திரம் என பெயரிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத விஷயங்களைக் கூட, இடம்பெற்றிருப்பதாக, தனது ஆலோசகர்கள் அளிக்கும் தவறான தகவல்களை வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.

நாட்டு மக்களின் வளங்களையெல்லாம் பறித்து, அவற்றை ஊடுருவல்காரர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்ததைத் தொடர்ந்து கார்கே, இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

அது மட்டுல்லாமல், பெண்களின் தாலியைக் கூட காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்றும் பிரதமர் மோடி பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்திருக்கும் கார்கே, நியாய பத்திரம் என்பது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்கும் பத்திரம். இதிலிருந்து ஒரு சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைவைத்து பிரிவினையை ஏற்படுத்துவது உங்கள் வழக்கமாகிவிட்டது. உங்களது பேச்சு, நீங்கள் வகிக்கும் பதவியின் மாண்பைக் குறைக்கும் வகையில் உள்ளது. எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வார்த்தைகளைக் கூட, உங்களது ஆலோசகர்கள் தவறான தகவல்களை உங்களுக்கு அளித்துவிடுகிறார்கள்.

எனவே, உங்களை நேரில் சந்தித்து நியாய பத்திரம் தொடர்பாக விளக்கம் அளிக்க தயாராக இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதன் மூலம், பிரதமர் மோடி, மக்களுக்கு தவறான தகவல்களை பகிர்வது தடுக்கப்படும் என்றும் கார்கே தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com