மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

மும்பை விமான நிலையத்தில் ரூ.13.57 கோடி மதிப்பிலான தங்கம் கைப்பற்றல்
கோப்புப் படம்
கோப்புப் படம்

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் பயணிகளால் கடத்தப்பட்டிருந்த ரூ.13.57 கோடி மதிப்புள்ள 20.95 கிலோ தங்கும், ரூ.23 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்கள், புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்டுகளை சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

விசாரணையின் போது, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஒன்பது பயணிகளை சேதனையிட்ட போது அவர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் இந்த பொருட்களை கொண்டு வந்ததற்காக மும்பை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 22 முதல் 28 வரையான நாட்களில், 27 வழக்குகளில் மும்பை சுங்கத் துறையின் விமான நிலைய அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விமான நிலையத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை சோதனையிட்டபோது, அவர்களின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் ஓவல் வடிவ காப்ஸ்யூல்களில் தங்க தூசியும், பயணிகள் அணியும் சட்டைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க தூசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com