ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் போலி விடியோ பகிர்ந்த வழக்கில் விசாரணை
ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்த போலி விடியோ வழக்கின் விசாரணைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேரில் ஆஜராக தில்லி சைபர் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. தெலங்கானாவில் வருகின்ற மே 13-ஆம் தேதி 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதற்கிடையே தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வது போன்று அமித் ஷா பேசும் விடியோவை ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சிலர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தனர். தெலங்கானா காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் அந்த விடியோ பதிவிட்டிருந்தனர்.

ரேவந்த் ரெட்டி
பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

இந்த விடியோ போலியானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்த நிலையில், தில்லி சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் உள்துறை அமைக்கம் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்திருந்தது.

இந்த நிலையில், சைபர் குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள தில்லி போலீசார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை மே 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும், விசாரணைக்கு வரும் போது அவரின் செல்போனை எடுத்து வரவும் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com