தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

‘கர்நாடக மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் அம்மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’
தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

கர்நாடகத்தில் பல பெண்களைப் பாலியல் ரீதியாகச் சீரழித்ததாகக் குற்றம் சாட்டப்படும் முன்னாள் பிரதமர் தேவ கௌடவின் பேரனும் மக்களவை உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும், அதுதொடர்பான காணொளிகளும் பரவி வருவது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா
பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

இதுகுறித்து அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமித் ஷா,

“நாட்டு பெண்களுக்கு உறுதுணையாக நிற்பதே பாஜகவின் நிலைபாடு. பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை. கர்நாடகத்தில் காங்கிரஸ் தான் ஆட்சி செய்து வருகிறது. ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கில் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் விசாரணைக்கு ஆதரவாக இருக்கிறோம். எங்கள் கூட்டணிக் கட்சியான மஜதவும் நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க கர்நாடகத்தில் அக் கட்சியின் மேல்நிலைக் குழு இன்று ஆலோகிறது. அதில், நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இவற்றில் ஒரு தொகுதியான ஹாசனில் மீண்டும் இரண்டாவது முறையாக பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளராக, தேவகௌடாவின் பேரனும் ம.ஜ.த. கட்சித் தலைவர் ஹெச்.டி. ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார்.

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா குறித்த பாலியல் குற்றச்சாட்டுகளும், அது தொடர்பான காணொளிகளும் இணையத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ள நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா நாட்டைவிட்டு தப்பியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com