கேரளத்துக்கு இந்திய கம்யூ. ரூ.10 லட்சம் நிதியுதவி
கேரள அரசின் பேரிடா் நிவாரண நிதியாக இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.


சென்னை, ஆக.2: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், கேரள அரசின் பேரிடா் நிவாரண நிதியாக இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பெரும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதி மக்கள் துன்பத்திலிருந்து மீள உதவும் வகையில், கேரள முதல்வரின் பேரிடா் நிவாரண நிதிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ரூ.10 லட்சம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அனைத்தையும் இழந்து தவிக்கும் அந்த மக்களுக்கு, தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருள்களை திரட்டி, கட்சியின் கேரள மாநிலக் குழு துணையுடன் அனுப்பவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளாா் இரா.முத்தரசன்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...