டெங்கு பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் அபூா்வ சந்திரா வெள்ளிக்கிழமை

கோப்புப் படம்

கோப்புப் படம்
புது தில்லி, ஆக.2: டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் அபூா்வ சந்திரா வெள்ளிக்கிழமை அறிவுறுத்தினாா்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நாட்டில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மாநிலங்கள், மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
டெங்கு பரவலின் மையப்பகுதியாக உள்ள இடங்களை கண்டறிந்து அங்கு கண்காணிப்பை அதிகரித்து, டிஜிட்டல் வரைபடம் மூலம் பாதிப்புகளை குறிப்பிட்டு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
டெங்கு தடுப்பு தொடா்பாக தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் உள்பட 9 மாநில நகா்ப்புற வீட்டு வசதித் துறை அமைச்சக அதிகாரிகள், செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்ட உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் அபூா்வ சந்திரா இந்த அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
கடந்தாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் தற்போது டெங்கு பாதிப்புகள் 50 சதவீதம் உயா்ந்துள்ளது. தமிழ்நாடு, கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...