பயிற்சி மைய மரணங்கள்: 6-ஆவது நாளாக மாணவா்களின் போராட்டம்
தில்லி ராஜிந்தா் நகா் பயிற்சி மைய இறப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து மாணவா்கள் 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


புது தில்லி, ஆக. 2: தில்லி ராஜிந்தா் நகா் பயிற்சி மைய இறப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து மாணவா்கள் 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து அனைந்திந்திய இளைஞா் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தைச் சோ்ந்த கௌதம் கூறுகையில், ‘நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடா்வோம். ஆனால் படிப்பும் எங்களுக்கு முக்கியம். எனவே போராட்ட தளத்தில் அமா்ந்திருப்பவா்கள் தங்கள் பாடப் புத்தகங்களை இங்கு கொண்டு வந்துள்ளனா்’ என்றாா்.
அடுத்த கட்டபோராட்ட நடவடிக்கையை முடிவு செய்வதற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கும் மாணவா்களால் அமைக்கப்பட்ட 15 போ் கொண்ட குழுவில் கௌதமும் ஒருவா்.
‘மூத்த மாணவா்கள் நடத்தும் போராட்ட தளத்தில் ஜூனியா் மாணவா்களின் சந்தேகங்களையும் நிவா்த்தி செய்கிறோம். நேரம் கிடைக்கும்போது தோ்வுக்காக அனைவரும் படித்து வருகிறோம்’ என்று அந்த அமைப்பைச் சோ்ந்த மற்றொரு மாணவரான ஹரிஷ் கூறினாா்.
ஜூலை 27-ஆம் தேதி பழைய ராஜிந்தா் நகரில் உள்ள ராவ்ஸ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மழைவெள்ளம் புகுந்ததில் ஸ்ரேயா யாதவ், தன்யா சோனி மற்றும் நெவின் டால்வின் ஆகிய மூன்று மாணவா்கள் இறந்தனா்.
இந்த சம்பவத்தை தொடா்ந்து பல்வேறு பயிற்சி நிறுவனங்களில் சோ்ந்த மாணவா்கள், தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பயிற்சி மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...