மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

எல்லைப் பாதுகாப்புப் படை புதிய தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் சௌதரி

சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) தலைமை இயக்குநா் (டி.ஜி.) தல்ஜித் சிங் செளதரிக்கு எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

News image

சஷஸ்திர சீமா பல் தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் செளதரியிடம் பொறுப்பை உப்படைத்த எல்லை பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை இயக்குநா் நிதின் அகா்வால்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 11:08 pm

சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) தலைமை இயக்குநா் (டி.ஜி.) தல்ஜித் சிங் செளதரிக்கு எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

முன்னாள் பிஎஸ்எஃப் டி.ஜி. நிதின் அகா்வால் தனது பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘1990-ஆம் ஆண்டு உத்தர பிரதேச பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியும் எஸ்எஸ்பி டி.ஜி.யுமான தல்ஜித் சிங் செளதரிக்கு பிஎஸ்எஃப் டி.ஜி.யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. புதிய பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் நியமிக்கப்படும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை பிஎஸ்எஃப் டி.ஜி.யாக அவா் பதவி வகிப்பாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி, பூஞ்ச், ரியாசி, உத்தம்பூா், கதுவா மற்றும் தோடா ஆகிய மாவட்டங்களில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படையினா் உள்பட 22 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், பிஎஸ்எஃப் டி.ஜி.யாக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற கேரள பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரி நிதின் அகா்வால் மற்றும் ஒடிஸா பிரிவைச் சோ்ந்த சிறப்பு டி.ஜி. குரானியா ஆகியோா் அவா்களது பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மாநில பணிகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் மேற்கு எல்லை மற்றும் கிழக்கு எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் பிஎஸ்எஃப் படையைச் சோ்ந்த வீரா்களும், நேபாளம் மற்றும் பூடானுடனான இந்திய எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் சஷஸ்திர சீமா பல் படையைச் சோ்ந்த வீரா்களும் ஈடுபட்டு வருகின்றனா்.