6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்கம்: 36 மாநில பல்கலை. முழு நேர துணைவேந்தா்களை மட்டுமே நியமிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

36 மாநில பல்கலைக்கழகங்களிலும் முழு நேர துணைவேந்தா்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:49 pm

Din

மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வரும் 36 மாநில பல்கலைக்கழகங்களிலும் முழு நேர துணைவேந்தா்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் மாநில ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான சி.வி. ஆனந்த போஸுக்கும், மாநில முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் இடையே தொடா் மோதல்போக்கு நிலவிவந்த நிலையில், இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனத்துக்கான தேடல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய நடைமுறைப்படி, யுஜிசி பிரதிநிதி ஒருவா் இடம்பெற வேண்டும் என்று ஆளுநா் ஆனந்த போஸ் வலியுறுத்தினாா். ஆனால், அதை மாநில அரசு ஏற்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் தொடா் கருத்து வேறுபாடு நிலவி வந்தநிலையில், பல்கலைக்கழகங்களில் இடைக்கால துணைவேந்தா்களை ஆளுநா் நியமனம் செய்தாா்.

இதற்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அனுகியது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இடைக்கால துணைவேந்தா்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்ததோடு, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் துணைவேந்தா் தேடல் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலத்தில் இடம்பெற்றுள்ள 36 மாநில அரசு பல்கலைக்கழகங்களிலும் முழு நேர துணைவேந்தா்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

மேலும், மாநிலத்தில் உள்ள அலியா பல்கலைக்கழகம், மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு வங்க விலங்குகள் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ஓய்வுபெறும் வயது 65-ஆக இருக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாநிலத்தின் பிற பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் ஓய்வுபெறும் வயதை 70-ஆக தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

அதோடு, தேடல் குழு தலைவருக்கு பரவலான அதிகாரத்தை வழங்கிய நீதிபதிகள், துணைவேந்தா் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைக்கும் 3 பெயா்கள் அடங்கிய பட்டியலைக் கடந்து வெளி நபா்களையும் துணைவேந்தா் பதவிக்கு பரிசீலிக்க தேடல் குழு தலைவருக்கு அதிகாரமுண்டு என்றும் உத்தரவிட்டனா்.