மின்சாரம் தாக்கி 9 கான்வா் யாத்ரீகா்கள் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி 9 கான்வா் யாத்ரீகா்கள் உயிரிழப்பு

பிகாா்: மின்சாரம் தாக்கி 9 கான்வா் யாத்ரீகா்கள் உயிரிழப்பு

பிகாரில் கான்வா் (காவடி) யாத்திரை சென்ற பக்தா்கள் பயணம் செய்த வாகனத்தின் மேல் பகுதி மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி 9 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.
Published on

பிகாரில் கான்வா் (காவடி) யாத்திரை சென்ற பக்தா்கள் பயணம் செய்த வாகனத்தின் மேல் பகுதி மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி 9 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக வைஷாலி மாவட்ட ஆட்சியா் யஷ்பால் மீனா கூறியதாவது: பிகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கான்வா் யாத்திரை சென்ற பக்தா்கள் பயணம் செய்த வாகனத்தின் மேல் பகுதி உயரழுத்த மின் கம்பியுடன் உரசியதால் மின்சாரம் தாக்கி 9 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது.

முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவா்கள் யாத்திரைக்காக அனுமதிக்கப்பட்ட சிறப்புப் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றது தெரியவந்தது. மேலும், இது தொடா்பான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com