எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கர்நாடகம்தான் காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம்: பாஜக எம்.பி.

முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதாக பாஜக எம்.பி. விஜயேந்திரா குற்றச்சாட்டு

News image
கர்நாடக பாஜக எம்.பி. விஜயேந்திரா (கோப்புப் படம்)
Updated On :5 ஆகஸ்ட் 2024, 11:21 am

DIN

கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை செயல்படுத்தத் தவறியதாக பாஜக எம்.பி. விஜயேந்திரா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கர்நாடகத்தில் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் ஊழலை எதிர்த்து, பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிகளில் தலைமையில் 'மைசூரு சலோ' என்ற பெயரில் பெங்களூரில் உள்ள கெங்கேரியில் இருந்து மைசூர் வரை 10 நாள் 'மைசூர் சலோ' பாதயாத்திரை ஆக. 3ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதயாத்திரையின்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி செய்தியாளர்களிடம் பாஜக எம்.பி. விஜயேந்திரா பேசினார்.

பாஜக எம்.பி. விஜயேந்திரா பேசியதாவது, ``காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்ல நிர்வாகம், நல்ல வளர்ச்சி மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தை வழங்குவதாக கர்நாடக மக்களுக்கு வாக்களித்தது, ஆனால் சித்தராமையா தலைமையிலான அரசு வாக்குறுதிகளில் தோல்வியடைந்தது.

இந்த அரசின் நிர்வாகத்தில்தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதுமட்டுமின்றி, பல ஊழல் வழக்குகளை முதல்வர் சித்தராமையா புறக்கணித்துள்ளார்.

இந்த முதல்வர் காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டார். காங்கிரஸ் கட்சிக்கும், காந்தி குடும்பத்திற்கும் கர்நாடகம்தான் ஏடிஎம் மிஷின்போல ஆகிவிட்டது.

அதனால்தான், நாங்கள் இந்த ஆட்சியை எதிர்த்துப் போராடுகிறோம்; இந்த ஊழல் முதல்வர் நீக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பாஜகவினரின் பாதயாத்திரையை கண்டித்து, ``அவர்கள் ஒரு பிரச்னையிலிருந்து வேறொரு பிரச்னையை உருவாக்க முயற்சிக்கின்றனர்’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.