
பயிற்சி மையங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான பிரச்னையை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
புதுதில்லியில் ஜூலை 27 பெய்த கனமழையால் கரோல் பாக் பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள ஐஏஎஸ் தோ்வுக்கான தனியார் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழைநீர் புகுந்ததில், 3 மாணவர்கள் வெள்ளத்தில் மூழ்கி பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, தில்லியில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த பல்வேறு பயிற்சி மையங்களுக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில், பயிற்சி மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான பிரச்னையை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது பேசிய நீதிபதி, தில்லி பயிற்சி மையத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிருப்தி தெரிவித்ததோடு, இந்த பயிற்சி மையங்கள் மரண அறைகளைக் கொண்டிருப்பதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, இதுவரை பயிற்சி மையங்கள் பின்பற்றுவதற்கு என்னென்ன விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது என்று விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.