சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாடு நிலச்சரிவு: மீட்புப் படை வீரர்களுக்கு டிரோன்கள் மூலம் உணவு

வயநாடு நிலச்சரிவு நேரிட்ட பகுதிகளில் மீட்புப் படை வீரர்களுக்கு டிரோன்கள் மூலம் உணவு

News image
சூரல்மலையில்..- படம் | பிடிஐ
Updated On :5 ஆகஸ்ட் 2024, 5:52 am

DIN

வயநாடு: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், உயிரோடு யாரேனும் இருக்கிறார்களா? உயிரிழந்த உடல்களை தேடி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படை வீரர்களுக்கு டிரோன்கள் மூலம் உணவு வழங்கும் திட்டம் தொடங்கியிருக்கிறது.

நிலச்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு உரிய நேரத்தில் உணவளிப்பதை உறுதி செய்யும் வகையில், ஆளில்லாத, பறக்கும் டிரோன்கள் மூலம் உணவு விநியோகிக்கும் பணி தொடங்கியிருக்கிறது.

நூற்றுக்கணக்கான வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அதிகாரிகள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுமார் 10 பேருக்கான உணவுப் பொட்டலங்களை ஒரே டிரோனில் எடுத்துச் செல்லும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்கள்.

மீட்புப் படை வீரர்களுக்கு உதவும் வகையில் துரிதமாக உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கும் பணி இதன் மூலம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

நிலச்சரிவு நேரிட்ட இடங்களில் மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் ஒருங்கே நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து ஏழாவது நாளாக திங்கள்கிழமையும் மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகின்றன. தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் உள்பட 1,500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவம், கடற்படை, வனத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை என பல்வேறு துறை வீரர்கள் சுமார் ஆறு பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலியாற்றங்கரையோரம், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களிலும் உடல்களைத் தேடும் பணி தொடங்கவிருப்பதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னமும் 180 பேரின் நிலை தெரியவரவில்லை. இன்னும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாமா என்பது குறித்தும் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இத்துயர சம்பவத்தில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்ததுடன் பலா் வீடுகளை இழந்து நிற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.