ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ரூ.800 கோடி மதிப்பிலான 792 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

மகாராஷ்டிரத்தில் போதைப்பொருள் தயாரித்த இரண்டு பேரை குஜராத் காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2024, 11:58 am

DIN

மகாராஷ்டிரத்தின் பிவாண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மெபெட்ரோன் என்னும் போதைப்பொருள் தயாரித்த இரண்டு பேரை குஜராத் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 800 கோடி மதிப்பிலான 792 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ குஜராத்தின் சூரத் மாவட்டம், பல்சானா தாலுகாவின் கரேலி கிராமத்தில் அமைந்துள்ள சட்டவிரோத போதைப்பொருள் மெபெட்ரோன் தயாரிக்கும் தொழிற்சாலையை குஜராத் காவல்துறை கண்டுபிடித்தது. அதில் ரூ. 750 கோடி மதிப்பிலான திடநிலையிலான மெபெட்ரோன் மற்றும் ரூ. 51.409 கோடி மதிப்பிலான 31.409 கிலோ திரவ மெபெட்ரோன் ஆகியவை இருந்துள்ளன. அவை மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முகமது யூனுஸ் | முகமது அடீல்

முகமது யூனுஸ் | முகமது அடீல்

இந்த வழக்கில் மொத்தம் 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது யூனுஸ், முகமது அடீல் ஆகியோர் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனையில் முகமது யூனுஸ், முகமது அடீல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முகமது யூனுஸ் துபையில் இருந்து தங்கம், எலக்ட்ரானிக் பொருள்களை கடத்தி வந்து இந்தியாவில் விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முகமது யூனுஸ், முகமது அடீல் ஆகியோர் கடந்த 8-9 மாதங்களாக மகாராஷ்டிரத்தின் பிவாண்டி, நாடி நாகாவில் உள்ள மன்சோவின் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் இருந்து சட்டவிரோதமாக மெபெட்ரோன் தயாரித்துள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.