மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல்

நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
kiren rijiju
அமைச்சர் கிரண் ரிஜிஜுdotcom
Published on
Updated on
1 min read

வக்ஃப் வாரிய அதிகாரங்களை திருத்தம் செய்யும் மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

வக்ஃப் வாரிய சொத்து குறித்து தீர்மானிக்கும் வாரியத்தின் அதிகாரம் தொடர்பான வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதாவுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மக்களவையில் இந்த மசோதாவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.

முன்னதாக, அந்த மசோதாவின் நகல் அவை உறுப்பினா்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பப்பட்டது.

image-fallback
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்; எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

இந்த மசோதாவின்படி , தற்போதைய சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவு 40 நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரிய உறுப்பினா்களும் இடம்பெறும் தொகுப்பு அமைப்பாக மாற்றப்படுவதோடு, முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவா்களும் வக்ஃப் வாரியங்களில் இடம்பெறுவதை மசோதா உறுதி செய்கிறது.

மேலும், போராஸ், அகாகனிஸ் ஆகிய பிரிவுகளுக்கென தனி சொத்து வாரியம் (அக்ஃப்) உருவாக்கப்பட்டு, அதில் ஷியாஸ், சன்னி, போராஸ், அகாகனிஸ் மற்றும் பிற இதர பிற்படுத்த முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

kiren rijiju
வினேஷ் போகத் தகுதி நீக்கம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு

‘வக்ஃப்’ என்பதற்கான தெளிவான விளக்கம் மசோதாவில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுபவராகவும், வக்ஃப் சொத்துக்கு உரிமையாளராகவும் இருக்கும் எந்தவொரு நபரும் ‘வக்ஃப்’ உறுப்பினராவாா்’ என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மத்திய வலைதளம் மற்றும் தரவுத்தளம் மூலமாக வக்ஃப் வாரிய சொத்துகள் பதிவை முறைப்படுத்தி, வெளிப்படுத்தன்மையைக் கொண்டுவருவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kiren rijiju
மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு..!

மேலும், ‘வக்ஃப் வாரிய சட்டம் 1995’ சட்டத்தை ‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம் 1995’ என்று பெயா் மாற்றம் செய்யவும் மசோதா பரிந்துரைக்கிறது.

மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மக்களவையில் புதன்கிழமை எதிா்ப்பு தெரிவித்ததோடு, மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com