மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு..!

சற்று முன்... மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு

வினேஷ் போகத்

Published On :

மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்டதைவிட 100 கிராம் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். என்னிடம் இனி போராட சக்தியில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார் வினேஷ் போகத்.

“நான் தோற்றுவிட்டேன், மல்யுத்தம் வென்றுவிட்டது... என்னை மன்னிக்கவும், எனது தாயாரின் கனவும் என்னுடைய தைரியமும் உடைந்து போயுள்ளன... இனிமேலும் போராட வலுவில்லை என்னிடம்...

மல்யுத்தத்திலிருந்து(2001 - 2024) விடைபெறுகிறேன். மன்னிப்புக்காக, உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்” எனப் திவிட்டுள்ள்டு விடைபெற்றுள்ளார் போகத்.

வினேஷ் போகத் மேல்முறையீடு

தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து சா்வதேச விளையாட்டு நடுவா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வினேஷ் போகத் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக வியாழக்கிழமை காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்ப்பு வழங்கப்படவுள்ளது.

முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டிருந்தாா். இந்நிலையில், கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என தனது கோரிக்கையை மாற்றியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.