
பாரீஸ் ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகரில் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை (ஆக.8) நள்ளிரவில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
வெள்ளிவென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அவரின் காயம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி பாகிஸ்தான் வீரரும் என் மகன் தான் கூறிய நீரஜ் சோப்ராவின் தாயாருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்கம் வெல்லவில்லை என்பதற்காக மனம் தளர வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.