/

மோடி, அமித் ஷா மீது வழக்கு தொடருவேன்! சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை

மோடியை மிரட்டினாரா சோனியா? வழக்கு பாயும் -சுப்பிரமணியன் சுவாமி

News image
மோடி - அமித் ஷா
Updated On :10 ஆகஸ்ட் 2024, 1:19 pm

DIN

ராகுல் காந்தி ‘இந்திய குடிமகன் அல்ல’ என டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் தெரிவித்துள்ளார்.

Story image

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்திருந்தார் அப்போதைய எம்.பி. டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. அவரது புகாரைத் தொடர்ந்து மத்திய அரசு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்பு தான் தாக்கல் செய்திருத்த புகார் கடிதத்தின் நகலுடன், பிரிட்டன் அரசிடம் ராகுல் காந்தி சமர்ப்பித்துள்ள வருமான வரி படிவத்தின் நகலையும் இணைத்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

அவர் கூறியிருப்பதாவது, “2003-ஆம் ஆண்டு பிரிட்டன் குடியுரிமையைப் பெற்ற ராகுல் காந்தி ஒரு வெளிநாட்டவர். அப்படியிருக்கையில், மோடியும் அமித் ஷாவும் ராகுல் காந்தியை பாதுகாப்பது ஏன்?

மேலும், ராகுல் காந்தி லண்டனில் நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். ஆகவே, அவருடைய இந்திய குடியுரிமை தகுதியற்றது.

ராகுல் காந்தியை பாதுகாத்து வரும் நடவடிக்கையை மோடி தொடர்ந்தால், அவர் மீதும் அமித் ஷா மீதும் வழக்கு தொடருவேன்.

எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாதென சோனியா காந்தியால் மோடி மிரட்டப்பட்டாரா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், ராகுல் காந்தியின் குடியுரிமையை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.