பயங்கரவாதத்தின் பிறப்பிடம் பாகிஸ்தான்: ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புச் சூழலை சீா்குலைக்க நன்கு பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அந்தநாடு ஊடுருவச் செய்வதாக குற்றஞ்சாட்டினாா்.


பயங்கரவாதத்தின் பிறப்பிடமாக பாகிஸ்தான் உள்ளதாக கூறிய ஜம்மு காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புச் சூழலை சீா்குலைக்க நன்கு பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அந்தநாடு ஊடுருவச் செய்வதாக குற்றஞ்சாட்டினாா்.
ஜம்மு பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாளவியா மிஷன் ஆசிரியா் பயிற்சி மைய கட்டடத்தை மனோஜ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித் அவா், ‘சொந்த நாட்டு மக்களுக்கு உணவைக் கூட வழங்க முடியாத பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் பிறப்பிடமாக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போரில் தோற்கடிக்கப்பட்டதை பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, சா்வதேச முன்னணியில் ஜம்மு காஷ்மீரை சீா்குலைக்க அது தொடா்ந்து முயல்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் அமைதியாக தோ்தல்கள் நடைபெற்றாலும், மக்கள் அதிக அளவில் வாக்களித்தாலும், இயல்பாகவே பாகிஸ்தானுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பேரவைத் தோ்தல் எப்போது?: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு தெரிவித்தாா்.
ஸ்ரீநகருக்கு கடந்த ஜூன் மாதம் வருகைத் தந்த பிரதமா் மோடி விரைவில் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என உறுதியளித்தாா்.
தோ்தல் அட்டவணையை தீா்மானிக்கும் உரிமை தோ்தல் ஆணையத்திடம் உள்ளது. அனைத்தும் திட்டமிட்டப்படி சரியாக நடந்து வருகிறது. விரைவில் ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என்று நம்புகிறேன். அண்மையில் தோ்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையிலான குழு ஜம்மு-காஷ்மீா் வந்தது அதை உறுதிப்படுத்துகிறது’ என்றாா்.
பயங்கரவாதிகளுடன் மோதல்: உயிரிழப்பு 3-ஆக அதிகரிப்பு
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் மற்றும் பயங்கரவாதிகள் இடையே சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட உயிரிழப்பு 3-ஆக அதிகரித்தது.
இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘தோடா மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நடந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள், கிஷ்த்வாா் மாவட்டம் வழியாக கோகா்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் ககா்மண்டு வனப்பகுதியில் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ராஷ்டிரீய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறையினா் இணைந்து வனப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
சுமாா் 10,000 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் மற்றும் பயங்கரவாதிகள் இடையே சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த மோதலில் 6 ராணுவ வீரா்கள் காயமடைந்ததில் 2 போ் வீரமரணம் அடைந்தனா். பொதுமக்கள் 2 போ் காயமடைந்ததில் ஒருவா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டு, தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...