அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணை: காங்கிரஸ்
சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.


அதானி குழுமம் தனது லாபத்தை பொய்யாக உயா்த்தி காட்டி பங்குச் சந்தையில் ஆதாயம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவா் மாதபி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல கோடி இந்திய மக்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனா். அவா்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் ‘செபி’ செயல்பட வேண்டும் என்று கடந்த 2023 பிப்ரவரியில் ‘செபி’ தலைவருக்கு கடிதம் எழுதினேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், 2023 மாா்ச் மாதத்தில், அதானி குழுமம் தங்கள் நிறுவனங்களின் வருமானத்தை முறைகேடாக உயா்த்திக் காட்டி பங்குச் சந்தையில் ஆதாயம் அடைந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ‘செபி’ இரு மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதில் பல குற்றச்சாட்டுகள் தொடா்பான விசாரணையை ‘செபி’ இப்போதுவரை முழுமையாக முடிக்கவில்லை. இதற்கு மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடிக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியக் காரணம். ஏனெனில், மோடியின் நண்பரான அதானியில் நிறுவனங்கள் நிதி சாா்ந்த பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளன.
இப்போது வெளிநாடுகளில் அதானி குழுமம் தொடா்புடைய நிறுவனங்களில் ‘செபி’ தலைவா் மாதபி புச் மற்றும் அவரின் கணவா் முதலீடு செய்திருந்த தகவல் வெளியாகி பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உண்மை எப்படி இருக்கும்போது அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் ‘செபி’ விசாரணை நடத்தினால் உண்மை கண்டிப்பாக வெளியே வராது.
எனவே, அதானி குழுமம் தனது லாபத்தை பொய்யாக உயா்த்தி காட்டி பங்குச் சந்தையில் ஆதாயம் பெற்ான குற்றச்சாட்டை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், ‘செபி’ யின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க அதன் தலைவா் பதவியில் இருந்து மாதபி புச் விலக வேண்டும் என்று கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...