
தெலங்கானாவில் செல்போன் பேசிக்கொண்டு, ஹீட்டரைப் பயன்படுத்திய நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தெலங்கானாவின் கம்மம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் பாபு என்ற நபர், ஆக. 11, ஞாயிற்றுக்கிழமையில், தனது நாயை குளிப்பாட்டுவதற்காக, நீர் சூடேற்றிக் கம்பி (வாட்டர் ஹீட்டர்) மூலம் நீர் சுடவைக்க முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில், மகேஷ் பாபுவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மகேஷ் தொலைபேசி அழைப்பை எடுக்க முயன்றபோது, தவறுதலாக, நீர் சூடேற்றியைக் கையில் வைத்தவாறே, இயக்கியுள்ளார்.
இதனையடுத்து, நீர் சூடேற்றியில் பாய்ந்த மின்சாரம், மகேஷின் உடலிலும் பாய்ந்ததில், அவர் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மகேஷின் மனைவி, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், மகேஷ் உயிரிழந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.