
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மருத்துவ சேவைகளை திங்கள்கிழமை நிறுத்துவதற்கு இந்திய உறைவிட மருத்துவா்கள் சங்க சம்மேளனம் (எஃப்ஓஆா்டிஏ) அழைப்பு விடுத்து இன்று(ஆக. 12) போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, இன்று(ஆக. 12) மாலை இந்திய உறைவிட மருத்துவா்கள் சங்க சம்மேளன மருத்துவர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெபி நட்டா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது அவரிடம் தங்களது கோரிக்கைகளை மருத்துவர்கள் முன் வைத்துள்ளனர். அதன் பின் செய்தியாளரக்ளுடன் பேசிய எஃப்ஓஆா்டிஏ தலைவர் அவிரல் மாத்தூர், “மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அப்போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி விசாரணையை மத்திய முகமைகள் மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள மருத்துவரின் குடும்பத்துக்கு உரிய நிவரணம் கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ‘மத்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு சட்டத்தில்’ விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டுமென்பதையும் எடுத்துரைத்துள்ளோம்.
ஓரிரு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், இன்னும் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துளது மத்திய அரசு. மத்திய அரசு வெறும் வாக்குறுதிகளை அளித்தால் மட்டும் போதாது.
இதன் காரணமாக பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. போராட்டம் தொடருகிறது. நாளையும் அத்தியாவசிய, அவசர சிகிச்சைப் பிரிவுகளைத் தவிர பிற மருத்துவ சேவைகளை மருத்துவர்கள் புறக்கணித்து போராட்டத்தை தொடருவோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.