
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 231 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில வருவாத்துறை அமைச்சர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் 205 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த சில நாள்கள் ஆற்ரங்கரையையொட்டிய பகுதிகளில் மீட்புக்குழுக்கள் தேடுதல் பணிகளில் ஈடுபடுவர் என்றும் தெரிவித்துள்ளார்.
நிலம்பூர் பகுதியில் திங்கள்கிழமையன்று(ஆக. 12) ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், கந்தன்பாறையில் உடல் பாகங்கள் மூன்று மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.