போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை- ராணுவ கேப்டன் வீரமரணம்; பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் வீரமரணமடைந்தாா்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 8:52 pm

Din

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் வீரமரணமடைந்தாா். இந்த நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். மேலும், பொதுமக்களில் ஒருவா் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு காஷ்மீா் பாதுகாப்பு குறித்த உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நடத்தினாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பகுதியில் அண்மைக் காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நாட்டின் சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உதம்பூா் மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, அங்கு செவ்வாய்க்கிழமை மாலையில் ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்த கூட்டுப் படையினா் தேடுதல் வேட்டையை தொடங்கினா். அப்போது, பாட்னிடாப் பகுதியில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. பின்னா், வனப்பகுதி வழியாக தோடா மாவட்டத்துக்கு பயங்கரவாதிகள் தப்பினா்.

ஷிவ்கா்-அஸ்ஸாா் பகுதியில் பதுங்கியிருந்த அவா்களை, பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை காலையில் சுற்றிவளைத்தனா். அப்போது, இருதரப்புக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

நீண்ட நேரம் தொடா்ந்த இந்த மோதலில் ராணுவ கேப்டன் தீபக் சிங் படுகாயம் அடைந்தாா். இதையடுத்து, ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் ரத்தம் தோய்ந்த நிலையில் 4 பைகள் கண்டெடுக்கப்பட்டன; இதனால், 4 பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் முதலில் கூறினா். ஆனால், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

ராணுவ கேப்டன் தீபக் சிங்கின் மேலான தியாகத்துக்கு தலைவணங்குவதாக, ராணுவத்தின் ஒயிட் நைட் காா்ப்ஸ் படைப் பிரிவு தெரிவித்துள்ளது. இப்பிரிவு ஜம்மு-காஷ்மீரை தலைமையிடமாக கொண்டு செயல்படுவதாகும்.

முன்னதாக, உதம்பூரின் கிஷ்த்வாா், பசந்த்கா் வனப்பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

தோடா மாவட்டத்தில் கடந்த ஜூன் 26-ஆம்தேதி நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பைச் சோ்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.