தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஜம்மு-காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர், ஹரியாணாவுக்கு தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது.

News image

தேர்தல் ஆணையர்கள் - Atul Yadav

Updated On :16 ஆகஸ்ட் 2024, 3:14 pm IST

ஜம்மு -காஷ்மீருக்கு மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் ஜம்மு - காஷ்மீருக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 4ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றனர்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஜம்மு -காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை

தேர்தல் அட்டவணை

தொடர்ந்து, ஹரியாணாவுக்கு அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 4ஆம் தேதியே ஹரியாணாவிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா தேர்தல் அட்டவணை

ஹரியாணா தேர்தல் அட்டவணை

அனைத்து தரப்பு மக்களும் தேர்தலில் தங்களது பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். ஜம்மு - காஷ்மீருக்கு விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஜம்மு-காஷ்மீரில் 3.71 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன.

சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கும் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.