மருத்துவர்கள் வேலை நிறுத்தம்: புறநோயாளிகள் பிரிவில் மக்கள் அவதி!
மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக புறநோயாளிகள் பிரிவில் மக்கள் அவதிக்குள்ளாகினர்.


கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் மேற்கொண்டிருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, புறநோயாளிகள் பிரிவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால், புறநோயாளிகள் பிரிவில் மக்கள் வெகு நேரம் காத்திருக்கும் நிலையும் காணப்படுகிறது.
மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளைத் தவிர, மற்ற பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தின் காரணமாக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் சில மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மருத்துவ கல்லூரி மாணவியின் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும், பெண் மருத்துவர் படுகொலையில் நேர்மையான விசாரணை மற்றும் நியாயம் கிடைக்க வேண்டும், மருத்துவமனைகளில் பணிபுரியும் பெண் மருத்துவர்களுக்கு இரவு நேர பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும், அதோடு இந்திய முழுவதும் உள்ள பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.
தேசிய மருத்துவர் மற்றும் மருத்துவமனைச் சட்டத்தை உடனடியாக கொண்டுவரவேண்டும். அதேபோன்று மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றி மருத்துவமனையை பாதுகாப்பான முறையில் இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...