சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மலேசிய பிரதமர் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகை

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது மூன்று நாள் அரசு முறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வருகிறார்.

News image

Photo: IANS

Updated On :19 ஆகஸ்ட் 2024, 8:51 am IST

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது மூன்று நாள் அரசு முறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வருகிறார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், அன்வார் இப்ராஹிம் இன்று முதல் 21-ம் தேதி வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்கிழமை முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்த உள்ளார்.

அதன்பிறகு பிரதமர் மோடியுடன் இருத்தரப்பு உறவு குறித்து அவர் விவாதிக்க உள்ளார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் அன்வார் இப்ராஹிம் சந்தித்து கலந்துரையாடுகிறார்.

மேலும் இந்த பயணத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் மலேசிய பிரதமர் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.