தில்லியில் கனமழை: சாலைகளை மூழ்கடித்த மழைநீர் - போக்குவரத்து பாதிப்பு!
புதுதில்லியில் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!


புதுதில்லியிலும் மாநகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை(ஆக. 20) அதிகாலை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன்காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மிண்டோ பிரிட்ஜ் பகுதியில் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புதுதில்லி ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் நிலைய பயணிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கிடையே பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

மிண்டோ பிரிட்ஜ்
தில்லியிl திங்கள்கிழமை(ஆக. 19) வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது.
தில்லி மாநகருக்கும் அதன் சுற்றுவட்டார என்சிஆர் பகுதிகளிலும் இன்று(ஆக. 20) காலை வரை, கனமழை பெய்வதற்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை(ஆக. 20) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுதில்லி ரயில் நிலையம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...