சாலை விபத்து
சாலை விபத்து

உ.பி.யில் கார் - டிரக் மோதல்: 4 பேர் பலி, 2 பேர் காயம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

உத்தரப் பிரதேசத்தின் எட்டாவாவில் புதன்கிழமை கார் மீது டிரக் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர், இருவர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் தில்லியில் இருந்து ஹமிர்பிர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் போலீஸார் மருத்துவமனைக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த ரதி என்ற குழந்தையும், பூனம் என்ற பெண்ணும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்று நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com