மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாலையோர கடை மீது டேங்கர் லாரி மோதல்: 4 பேர் பலி

கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து மீது டேங்கர் லாரி மோதியதில் சாலையோர தேநீர் கடையில் இருந்தவர்கள் பலி..

News image

சாலை விபத்து

Updated On :22 ஆகஸ்ட் 2024, 5:19 am

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து மீது டேங்கர் லாரி மோதியதில் சாலையோர தேநீர் கடையில் லாரி புகுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.

ஹிஞ்சிலி அருகே சமர்ஜோலா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 59இல் இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பவானிபட்னாவில் இருந்து பெரஹாம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியது. டேங்கர் லாரி அஸ்கா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த ஒருவரும், மற்ற மூவரும் தேநீர் கடையில் அமர்ந்திருந்தவர்கள் ஆவார். மேலும் தேநீர் கடையிலிருந்த 13 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஜக்மோகன் மீனா கூறினார்.

இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.