அதிகம் விரும்பப்பட்ட மோடி-ஸெலென்ஸ்கி இன்ஸ்டாகிராம் பதிவு!
பிரதமா் மோடியுடன் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு, பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அதிகம் விரும்பப்பட்ட பதிவாக மாறியது.
போலந்து பயணத்தை வியாழக்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து உக்ரைன் தலைநகா் கீவ்-க்கு வந்தடைந்தாா். இதையடுத்து அந்நாட்டின் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை மோடி சந்தித்தாா்.
சந்திப்பின்போது மோடியுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிா்ந்து ஸெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ‘இந்தியா மற்றும் உக்ரைன் இடையேயான உரையாடல் மற்றும் உறவை வலுப்படுத்தும் இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமானது’ என குறிப்பிட்டிருந்தாா்.
அவரின் இந்த பதிவானது பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலே ஸெலென்ஸ்கியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அதிகம் விரும்பப்பட்ட பதிவாக மாறியது. சில மணிநேரங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது.
பல்வேறு சமூக ஊடக தளங்களில் எந்த ஒரு சா்வதேச தலைவா்களுக்கும் இல்லாத அளவுக்கு அதிக பின்தொடா்வோரை மோடி கொண்டுள்ளாா்.