போா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலி: 40 பேர் காயம்!

மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலியாகினர்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2024, 3:53 pm IST

மத்திய பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மகாராஷ்டிரத்தின் எல்லையையொட்டிய மத்திய பிரதேசத்தில் மாநிலத் தலைநகரான போபாலில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்ற தனியார் பேருந்து பந்துர்னா மாவட்டத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 40 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் மோஹித் காட் என்ற இடத்தில் டிவைடரில் மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி பிரிஜேஷ் பார்கவா தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் இருவர் காயமடைந்த நிலையிலும், மூன்று பயணிகள் சம்பவ இடத்திலேயேயும் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் பேருந்தை 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கிய போது கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சிந்துவாரா மாவட்டத்தில் இருந்து பந்துர்னா மாவட்டம் பிரிக்கப்பட்டது. இது மத்திய பிரதேசத்தின் 55 ஆவது மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.