நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ராஜஸ்தான்: காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் தற்கொலை

ஜெய்ப்பூரில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 10:35 am

DIN

ஜெய்ப்பூரில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பாங்க்ரோடா காவல் நிலையத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில்(ஸ்டடோர் ஹவுஸ்) தலைமைக் காவலர் பாபுலால் பைர்வா புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்கொலை செய்துகொண்ட அந்த காவலர், தனது மகன், மகள் மற்றும் மனைவியுடன் ஜெய்ப்பூரில் உள்ள லக்ஷ்மி விஹார் வைஷாலி மார்க் மேற்கில் வசித்து வந்துள்ளார்.

மேலும் பாபுலால் பைர்வா சடலம் அருகே தற்கொலைக் கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அதில் மூன்று போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நான்கு பேரும் தற்கொலைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தலைமைக் காவலர் தற்கொலைக்கு காரணமானவர்கள் கைது செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எஸ்எம்எஸ் மருத்துவமனை முன்பு போராட்டம் மேற்கொண்டனர். போராட்டக்காரர் கிரிராஜ் கூறுகையில், "பாபுலால் பைர்வா நேர்மையான போலீஸ் அதிகாரி, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் துன்புறுத்தப்பட்டார்.

அவரது மூத்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இச்சம்பவம் ஜெய்ப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.