தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மருத்துவர் கொலைக்கு முன் நள்ளிரவில் நடந்தது என்ன? கண்காணிப்பு கேமரா காட்சிகள்

கொல்கத்தா மருத்துவமனை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...

News image

பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகோரி சட்டத்துறையினர் போராட்டம் | புதுதில்லி

படம் | பிடிஐ

Updated On :24 ஆகஸ்ட் 2024, 1:00 pm

DIN

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.

மருத்துவமனையின் கண்காணிப்பு கேமரா காட்சிகள், பெண் மருத்துவரின் சடலம் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ‘ப்ளுடூத்’ கருவி ஆகியவற்றின் அடிப்படையில், சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டாா்.

பெண் மருத்துவா் கொல்லப்பட்ட வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்வதற்கு கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதியை வழங்கியது.

33 வயதான சஞ்சய் ராய்க்கு 4 முறை திருமணமாகியுள்ளதாகவும், அவர் பெண் பித்துப் பிடித்த நபர் என்பதும், குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ளதுடன் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராக சஞ்சய் ராய் பணியாற்றியுள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், சம்பவத்தன்று(ஆக. 9) கொல்கத்தா மருத்துவமனை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சஞ்சய் ராய், ஆக. 9-ஆம் தேதியன்று நள்ளிரவு 1 மணியளவில் மருத்துவமனைக்குள் நுழைவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

மேலும், கழுத்தில் ‘ப்ளுடூத்’ கருவி மாட்டிக்கொண்டிருந்த சஞ்சய் ராய் உயிரிழந்த பெண் மருத்துவரையும், இரவில் அவருடனிருந்த மருத்துவர்களையும், சஞ்சய் ராய் நோட்டமிடும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மருத்துவமனை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

கொல்கத்தா மருத்துவமனை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

இதனிடையே, ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதிக்கு மது அருந்திவிட்டு போதையில் சென்ற சஞ்சய் ராய், அங்கு பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் உடலுறவு வைத்திருந்ததாகவும், அதன்பின் மறுநாள் அதிகாலை 1 மணியளவில் ஆர். ஜி. கர் மருத்துவமனைக்கு அவர் சென்றிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணையில், நீதிமன்ற உத்தரவுப்படி, சிறை வளாகத்தில் இன்று(ஆக. 24) சஞ்சய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆர். ஜி. கர் மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்களை, மாநில அரசு சாா்பில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று(ஆக. 24) சிபிஐயிடம் சமர்ப்பித்துள்ளதாக கொல்கத்தா காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.