வங்காளத் திரைத்துறையே விபசார விடுதிதான்: நடிகை குற்றச்சாட்டு!

வங்காளத் திரைத்துறையிலும் பாலியல் குற்றங்கள் நடக்கிறதென்றும் அங்குள்ள திரைத்துறையே விபசார விடுதிதான் என நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
பெங்காலி நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி
பெங்காலி நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி
Published on
Updated on
2 min read

கேரளத்தைப் போன்று வங்காளத் திரைத்துறையிலும் பாலியல் குற்றங்கள் நடக்கிறதென்றும் அங்குள்ள திரைத்துறையே விபசார விடுதிதான் என வங்காள நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

மலையாளத் திரையுலகில் பெண் தொழிலாளர்கள் மற்றும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஹேமா அறிக்கை தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் திரைத்துறையில் பணிபுரியும் பெண்களின் நிலைமைகள் குறித்து 51 பேரிடம் வாக்குமூலம் பெற்று, ஆய்வு மேற்கொண்ட ஹேமா கமிட்டி, மாநில அரசிடம் சமீபத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.

இதில், பல இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பெங்காலி நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி
ஹேமா கமிட்டி அறிக்கை 5 ஆண்டுகள் தாமதம்: குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசு - காங்.

இதனைத் தொடர்ந்து தற்போது வங்காள நடிகையான ரிதாபாரி சக்ரவர்த்தி கேரளத்தில் நடப்பதைப் போலவே பெங்காலி திரைத்துறையில் தனக்கும் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், திரைத்துறையே விபசார விடுதி போல இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தியின் ஃபேஸ்புக் பதிவு
நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தியின் ஃபேஸ்புக் பதிவு

பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பதிவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெயரைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி, “மலையாளத் திரையுலகில் ’ஹேமா குழு அறிக்கை’ மூலம் வெளிவந்துள்ள பாலியல் குற்றங்கள் போன்று வங்காளத் திரையுலகில் ஏன் நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என்று நான் யோசிக்கிறேன்? அந்த அறிக்கையில் வெளியான பல குற்றச்சாட்டுகள் எனக்கும், என்னைப் போன்ற சக நடிகைகளுக்கும் நடந்ததைப் போலவே இருக்கின்றன.

இப்படிப்பட்ட குரூர மனம் கொண்ட நடிகர்கள்/ தயாரிப்பாளர்கள்/ இயக்குநர்கள் தங்கள் தவறுகளுக்கு எந்த விளைவுகளையும் சந்திக்காமல் தொடர்ந்து வேலை செய்கிறார்கள். பெண்களை வெறும் சதைப்பிண்டங்களாக நினைக்கும் இவர்கள் தான் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவருக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்வார்கள்.

இத்தகைய கொடூரமானவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். இந்த அரக்கர்களுக்கு எதிராக நிற்க என் சக நடிகைகளை நான் அழைக்கிறேன்.

நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி
நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி

இந்த ஆண்களில் பெரும்பாலானோர் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால் உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காது என நீங்கள் அச்சப்படுவது எனக்குத் தெரியும். ஆனால், எவ்வளவு நாள்கள் நாம் அமைதியாக இருப்பது.

பெரும் கனவுகளோடு இந்தத் துறைக்கு வரும் இளம் நடிகைகள் மீது நமக்கு பொறுப்பு இல்லையா? இந்தத் துறை இனிப்பு தடவிய விபசார விடுதியென்று அவர்கள் அறியவேண்டும்.

இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.